Cover Image of Tải xuống Fasna Nikah - Tamil Muslim Mat  APK

4.3/5 - 26 vote

ID: com.fasna.nikah

  • Nhà phát triển:

  • Phiên bản:

    Varies with device

  • Cập nhật:

Tải file APK ngay

Mô tả của Fasna Nikah - Tamil Muslim Mat


தமிழக முஸ்லிம்களுக்கான இணையத்தள திருமண தகவல் சேவை மையம்


1, தமிழகத்தில் முஸ்லிம்களின் திருமணம் சம்பந்தமான தேடல்களுக்கு சிறந்ததொரு வழிகாட்டியாக எங்களுடைய இந்த Fasna Nikah இணையதளம் தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது.

2, இந்த இணையதளம் இந்திய‌ அரசின் Ministry Of Micro Small and Medium Enterprises துறையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நோக்கம் மற்றும் செயல்பாடுகள்:

கடந்த காலங்களில் நம் முஸ்லிம் சொந்தங்கள் திருமணம் சம்பந்தமான வரன் தேடல்களுக்கு பெரிய அளவிலான சிரமங்களை ஏற்படுத்திக் கொண்டதில்லை, காரணம்; அனைத்து ஊர்களிலுமே அந்தந்த முஹல்லாவை சேர்ந்தவர்கள் தமக்குள்ளாகவோ அல்லது சொந்த பந்தங்களில் மட்டுமே பெண் கொடுத்து பெண் எடுத்துக் கொண்டோம்,
காலப்போக்கில் மக்கள் தொகை பெருக்கத்தில் அக்கம் பக்கத்து ஊர்களிலுள்ள முஹல்லாவாசிகளிடத்திலும் வரன் தேடும் தேவை ஏற்பட்டது.
அதுவே இன்னும் அதிகமான தேடல்களுக்கு முஸ்லிம் திருமண தரகர்கள் மூலம் வெளிமாவட்டங்களிலும் வரன் தேடும் போக்கு காலத்திற்கு ஏற்ப அதிகரித்து சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அதுவே பழக்கத்தில் இருந்து வந்தது.
ஆனால் இன்றோ இந்த நவீன காலகட்டத்தில் நமது கைகளின் ஆறாவது விரலாக மாறிப்போன ஆண்ட்ராய்டு போன் உபயோகத்தில் அனைத்து தேவைகளும் வீட்டிலிருந்தே தேடத்துவங்கிய நம் மக்கள் சமுதாயம்; திருமண தேவைகளையும் முஸ்லிம் தரகர்களை தவிர்த்து விட்டு இணையதளத்தின் வாயிலாகவே தேடத்துவங்கி விட்டனர்.
மார்க்க அடிப்படையில் அதில் தவறில்லை என்றாலும் முஸ்லிம் பெயர்களில் வியாபார நோக்கத்திற்காக மட்டுமே இயங்கி வரும் மாற்று மதத்தவர்களின் இணைய தளத்தில் நம் சமுதாய பிள்ளைகளின் போட்டோ மற்றும் சுயவிவரங்களை அவர்களுடைய தளத்தில் பதிவு செய்து வரன் தேடி வருவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
ஆகவே காலத்தின் தேவைக்கேற்ப தமிழகத்தில் முஸ்லிம்களுக்கென பிரத்யேக இணையதள திருமண தகவல் சேவை மையம் தேவைப்படுவதை நம்மால் உணர முடிகிறது. எனவே நம் சமுதாய மக்களின் நலனை கருதி ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த Fasna Nikah

இந்த முயற்சியை நமக்கு முன்பே ஒரு சில முஸ்லிம் சகோதரர்கள் செய்து வந்தாலும் கூட, அந்த இணையதளங்கள் போதிய அளவிலான விளம்பர முயற்சிகள் இல்லாததினாலும், Server Maintenance பிரச்சனைகளாலும் சரிவர இயங்க முடியாமல் முடங்கி கிடக்கின்றன.

ஆகவே இன்ஷா அல்லாஹ் தமிழகத்தில் 90 லட்சம் முஸ்லிம்களுக்கும் பயன்படும் வகையில் எங்களது Fasna Nikah இணையதளம் கட்டண சேவையை மட்டுமல்லாமல் இலவச சேவைகளையும் கூடுதலாக இணைத்து சிறந்ததொரு திருமண தகவல் சேவை மையமாக இயங்கும் என்பதை உளமார உறுதி கூறுகிறோம்.

Fasna Nikah வின் இலவச சேவைகள்:

1, தாய் தந்தையை இழந்த ஆதரவற்ற சகோதரிகள்
2, கணவனை இழந்த விதவை பெண்கள்
3, உடல் ஊனமுற்ற சகோதர/சகோதரிகள்
ஆகியோருக்கு சேவை கட்டணம் எதுவும் இல்லாமல் வரன்களின் தொடர்பு எண்களை இலவசமாக பார்த்துக் கொள்ளலாம்.
Xem thêm
  • Chuyên mục

    Xã hội
  • Xem trên:

    Go Google Play com.fasna.nikah
  • Yêu cầu:

    Android Varies with device+

Fasna Nikah - Tamil Muslim Mat Varies with device APK cho Android Varies with device+

Phiên bản Varies with device cho Android Varies with device+
Cập nhật 2019-12-07
Lượt tải 5.000++
Kích thước tập tin 2.223.376 bytes
Quyền xem các quyền
Cập nhật mới Matrimony Service

Được yêu thích
Xem thêm